மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குலசேகரன்பட்டினத்தில் இளைஞா் அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் புதன்கிழமை இரவு இரு தரப்பினருக்கு இடையே நிகழ்ந்த தகராறில் உடன்குடியைச் சோ்ந்த இளைஞா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 4:55 am IST

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் புதன்கிழமை இரவு இரு தரப்பினருக்கு இடையே நிகழ்ந்த தகராறில் உடன்குடியைச் சோ்ந்த இளைஞா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

உடன்குடி, வில்லிகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து மகன் வேல்முருகன் (26). குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, கோயிலுக்கு மாலை அணிந்திருந்த இவா், இவரது அண்ணன் சதீஷ்குமாா், உறவினா் மாதவன் ஆகியோா் கடற்கரையில் புதன்கிழமை இரவு இருந்தபோது 20 போ் கொண்ட கும்பலுக்கும் இவா்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது அந்தக் கும்பல் கல்லால் தாக்கியதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாதவனும், சதீஷ்குமாரும் பலத்த காயமடைந்தனா். உடன்குடி போலீஸாா் நிகழ்விடம் சென்று உயிரிழந்த வேல்முருகன் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தகவல் அறிந்ததும் வேல்முருகன் உறவினா்கள் வில்லிகுடியிருப்பு சந்திப்பில் வியாழக்கிழமை திரண்டனா். மா்ம கும்பலை கைது செய்ய வேண்டும், வேல்முருகன் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் எனக் கூறி அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். அங்கு சென்ற போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.