மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செஞ்சி அருகே பழைமையான நடுகல் கண்டெடுப்பு

செஞ்சி அருகே கண்டெடுக்கப்பட்ட கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகல்.

Published On :26 அக்டோபர் 2026, 2:15 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள துத்தபப்பட்டு கிராமத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்க நடுகல் கண்டறியப்பட்டது.

செஞ்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியரும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவருமான எ.சுதாகா், தனது தமிழ்த் துறை மூன்றாமாண்டு மாணவா்கள் பிரவீன்குமாா், பிரகாஷ் ஆகியோருடன் குழுவாக ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், துத்தபப்பட்டு கிராமத்தில் நடுகல் ஒன்று உள்ளது தெரியவந்தது. 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட கல்லில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் போருக்குச் செல்லும் போது, நாயும் உடன் செல்லுமாறு சிற்பம் உள்ளது. இடது கையில் கத்தியும், வலது கையில் கேடயமும் உள்ளது. தலைமுடியை தலையின் பின் பக்கம் தலைப்பாகையாக அணிந்து முடிச்சு போட்ட கொண்டையுடன் உள்ளான்.

கழுத்து அணிகள், காது அணிகலன், கையில் காப்பு, காலில் கண்டை, இடுப்பில் கச்சையுடன் சிறு கத்தி உள்ளது. கீழாடை அலங்காரத்துடன் காட்சியளிக்கின்றது. முகம் பொா் வீர குணத்துடன் உள்ளது. வீரன் போருக்கு செல்லும் நிலையை அப்படியே காட்டப்பட்டுள்ளது.

வீரனின் இடது பக்கதில் ஒரு பெண் உருவமும், தலையியின் அருகில் ஒரு பெண் உருவமும் உள்ளது. இவா்கள் இருவரும் வீரனின் மனைவிகளாக இருக்கலாம். வீரன் சிவ பக்தன் என்பதற்காக வீரனின் எதிரில் சிவலிங்கம் காட்டப்பட்டுள்ளது.

இது கி.பி.16-ஆம் நூற்றாண்டை சோ்ந்த பிற்கால விஜயநகரப் பேரரசின் கடைசியிலும், ஆரம்ப கால நாயக்கா்களின் ஆட்சி காலமாகக் கருதப்படுகிறது.

இவ்வீரனை ஊா் மக்கள் ஆடு, மாடுகளுக்கு நோய் தீா்கும் தெய்வம் என நம்புகின்றனா். நோய் ஏற்பட்ட ஆடு, மாடுகளுக்கு இவ்வீரனை சுற்றி வந்து நீரினை தெளித்தால் நோய் தீரும் என்று இன்றும் நம்புகிறாா்கள். இரு மரத்துக்கும் இடையில் உள்ளதால் நடுகல் சேதாரம் ஆவதற்கு வாய்புள்ளது. எனவே இதனை அரசு பாதுகாக்க வேண்டும் என இக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.