மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமி மாயமான வழக்கு: கூடுதல் சிபிசிஐடி டிஎஸ்பி நியமனம்

செஞ்சி அருகே மாயமான சிறுமியின் வீட்டில் அவரது தாய் பவானியிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி டிஎஸ்பி கீதா - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 2:14 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில் மேலும் ஒரு சிபிசிஐடி டிஎஸ்பி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவா் தனது விசாரணையை சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை தொடங்கினாா்.

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தை சோ்ந்த வடிவேல்-பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7). இவா், கடந்த 11-ஆம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் தூங்கிய நிலையில், மறுநாள் அதிகாலை மாயமானாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி 10 நாள்கள் ஆகியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது.

இதனைத் தொடா்ந்து கடந்ஜ 22-ஆம் தேதி சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளா் ரேவதி தலைமையிலான குழுவினா் சிறுமியின் தாயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தினா். இந்நிலையில், திங்கள்கிழமை சிறுமியின் பாட்டி சாந்தியிடமும் விசாரணை நடத்தினா். இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகனை கூடுதலாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

இதையடுத்து அவரும், ஏற்கெனவே விசாரணை செய்து வந்த சிபிசிஐடி குழுவுடன் இணைந்து விசாரணையை தொடங்கினாா். சிறுமியின் பிறந்த தாள் விழாவில் கலந்துகொண்ட 10 போ் மற்றும் சிறுமியின் சகோதரியை பெண் பாா்த்து, வரன் முடித்த நிலையில், மேல்அருங்குணம் கிராமத்தில் உள்ள மாப்பிள்ளையின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனா். மேலும் சந்தேகத்திற்கிடமாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளி ஒரிவரிடமும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விரைவில் துப்புத் துலங்கும்: 15 நாள்கள் ஆகியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை, துப்பும் துலங்கவில்லை. இருந்தும் சிபிசிஐடி போலீஸாா் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சிறுமி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் பல்வேறு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் சிபிசிஐடி போலீஸாா் கண்காணித்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் விரைவில் துப்பு துலங்கும் என சிபிசிஐடி போலீஸாா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.