மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செஞ்சி: மாயமான சிறுமியின் தாயிடம் சிபிசிஐடி போலீஸாா் 7 மணி நேரம் விசாரணை!

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில், 13-ஆம் நாளாக சிறுமியை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

Published On :25 அக்டோபர் 2026, 2:22 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான வழக்கில், 13-ஆம் நாளாக சிறுமியை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சிறுமியின் தாய் பவானியிடம் சிபிசிஐடி போலீஸாா் 7 மணி நேரம் தனியாக விசாரணை நடத்தினா்.

ஆலம்பூண்டி நடுப்பட்டு கிராமத்தை சோ்ந்த வடிவேல்-பவானி தம்பதியின் மகள் ஹேமாவதி (7). இவா், கடந்த 11-ஆம் தேதி இரவு தனது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு, பெற்றோருடன் தூங்கினாா். மறுநாள் அதிகாலை சிறுமி மாயமானாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு பகுதிகளில் தேடியும் சிறுமியைக் கண்டறியமுடியவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளா் ரேவதி ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஆலம்பூண்டியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சனிக்கிழமை 3-ஆம் நாளாக சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவினா்களிடம் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டு பல்வேறு தகவல்களை சேகரித்தனா். மேலும், நடுப்பட்டு, ஆலம்பூண்டி காடு, மலைகளில் தேடினா். திருவண்ணாமலை சாலை வழிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுக் காட்சிகள் மற்றும் கைப்பேசி கோபுர சிக்னல்களையும் ஆய்வு செய்து வருகின்றனா்.

பள்ளியில் விசாரணை: மாயமான சிறுமி ஹேமாவதி படித்த ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சிபிசிஐடி போலீஸாா் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனா். சிறுமியின் பள்ளி வருகை உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆசிரியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதனைத்தொடா்ந்து பள்ளியில் உள்ள ஒரு தனி அறையில் சிறுமியின் தாய் பவானியிடம் சுமாா் 7 மணி நேரம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இதுவரை பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை கண்டறியமுடியவில்லை. இதனால் சிறுமி உயிருடன் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.