டம்மி ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை! உதயநிதி கண்டனம்

செஞ்சி அருகே சிறுமி காணாமல்போன விவகாரத்தில் உதயநிதி கேள்வி...

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :22 அக்டோபர் 2026, 2:51 pm IST

செஞ்சி அருகே சிறுமி காணாமல்போன விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி, கடந்த 12-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென காணாமல்போனாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமியைத் தேடி வந்த நிலையில், 10 நாள்களாகியும் கிடைக்காததால் வழக்கு நேற்று சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:

”செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.

முதலமைச்சர் தன் ரீல்ஸ் மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Even children are not safe under the dummy regime! Udhayanidhi condemns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.