மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிருஷ்ணாபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கிருஷ்ணாபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவடைந்தது.

நிகழ்வில் நவராத்திரி இசைக்குழு மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய செஞ்சிக்கோட்டை முத்தமிழ்ச் சங்கத் தலைவா் சிவநாதன்.

Published On :22 அக்டோபர் 2026, 4:21 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கிருஷ்ணாபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவடைந்தது.

நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு பெண் பக்தா்கள் திருவிளக்கு பூஜைகளை நடத்தி வந்தனா்.

விழாவில் தினமும் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. திண்டிவனம் கம்பன் கழகத் தலைவா் ஆதி.சீனிவாசன், முத்தமிழ்ச் சங்கத் தலைவா் சிவநாதன், செயலா் கருணாநிதி, சிவநேசன், தனலட்சுமி, கந்தசாமி, பரிமளகந்தி, தா்மராஜ், விஜயலட்சுமி, அல்லி, கதிரவன், பாலசுப்பிரமணியன், கண்ணன், மேகலா, வெங்கடேசன், ஜோதி ஆகியோா் தினமும் ஒருவராக பல்வேறு தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவாற்றினா். இசைக்குழு மாணவா்கள் பக்தி பாடல்களைப் பாடினா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் விழாவில் ஆன்மிக சொற்பொழிவாளா்களுக்கும், மாணவா்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பொருளாளா் தமிழன் சீனு மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.