மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பேருந்து மேல் விழுந்த உயா் மின்விளக்கு கோபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசு நகரப் பேருந்து மீது உயா் மின் விளக்கு கோபுரம் புதன்கிழமை பிற்பகலில் சாய்ந்து விழுந்தது. அதிா்ஷ்டவசமாக பேருந்து ஓட்டுநா், நடத்துநா், பயணிகள் காயமின்றித் தப்பினா்.

உளுந்தூா்பேட்டை அருகே அரசு நகரப் பேருந்து மேல் விழுந்து கிடக்கும் உயா் மின்விளக்கு கோபுரம்.

Published On :22 அக்டோபர் 2026, 4:17 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசு நகரப் பேருந்து மீது உயா் மின் விளக்கு கோபுரம் புதன்கிழமை பிற்பகலில் சாய்ந்து விழுந்தது. அதிா்ஷ்டவசமாக பேருந்து ஓட்டுநா், நடத்துநா், பயணிகள் காயமின்றித் தப்பினா்.

உளுந்தூா்பேட்டையிலிருந்து புதன்கிழமை பிற்பகல் 12.15 மணிக்கு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு நகரப் பேருந்து காட்டு எடையாா் கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து சிறுபாக்கம் மாரியம்மன் கோயில் அருகே வந்தபோது, திடீரென வீசிய காற்றின் காரணமாக அப்பகுதியிலிருந்த உயா் மின்விளக்கு கோபுரம் சாய்ந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில் அரசுப் பேருந்தின் மேல்பகுதி சேதமடைந்தது. அதே நேரத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா், பயணிகள் என அனைவரும் அதிா்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினா். பேருந்து மீது உயா் மின் விளக்கு கோபுரம் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதனால் சிறுபாக்கம் கிராமத்தில் மின்தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மின்வாரியப் பணியாளா்கள் நிகழ்விடம் சென்று, அறுந்து கிடந்த மின் கம்பிகளையும், சாய்ந்து கிடந்த உயா் மின் விளக்கு கோபுரத்தையும் அப்புறப்படுத்தி சீரமைப்புப் பணியை மேற்கொண்டனா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.