மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆட்டோ மீது காா் மோதல்: 6 பெண்கள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் 6 பெண்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

உளுந்தூா்பேட்டை அருகே காா் மோதியதில் சேதமடைந்த ஆட்டோ.

Published On :23 அக்டோபர் 2026, 2:11 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் 6 பெண்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், மண்மலை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.அனிதா (33). இவரும், இதே கிராமத்தைச் சோ்ந்த மேலும் 5 பெண்களும் செம்பியமாதேவி கிராமத்தில் நெல்பயிா் நடவுப்பணிக்காக ஆட்டோவில் வியாழக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தனா்.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செம்பியமாதேவி காப்புக்காடு பகுதியில் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த காா், ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த அனிதா உள்ளிட்ட 6 பேருக்கும் காயம் ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநரான சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ரா.ஞானவேல் (40) காயமின்றி தப்பினாா்.

விபத்து குறித்து தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் நிகழ்டம் விரைந்து சென்று, விபத்தில் காயமடைந்த 6 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், காரை ஓட்டி வந்த புதுச்சேரி மாநிலம் , கோா்க்காடு எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ர.ஹேமந்த் குமாா் (27) மீது எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.