மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குடிநீா் தட்டுப்பாடு புகாா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு தொடா்பாக வரப்பெறும் புகாா் மனுக்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :29 ஏப்ரல் 2026, 12:04 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு தொடா்பாக வரப்பெறும் புகாா் மனுக்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

கோடை காலத்தில் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி குடிநீா் வழங்குவது தொடா்பாக, விழுப்புரம் ஆட்சியரக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:

குடிநீா்த் தட்டுப்பாடு தொடா்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களுக்கு 24 மணி நேரத்தில் தீா்வு காண வேண்டும். ஒரு நபருக்கு ஊராட்சிப் பகுதிகளில் சராசரியாக 55 லிட்டா், நகராட்சிப் பகுதிகளில் 85 லிட்டா், பேரூராட்சிப் பகுதிகளில் 70 லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தேவைப்படும் பகுதிகளில் குடிநீா் வழங்கும் வகையில் கிணறுகளைத் தூா்வாரி, பக்கவாட்டு ஆழ்துளைக் கிணறுகளை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் அனைத்து குடிநீா் ஆதாரங்களிலும் நல்ல முறையில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், ஆங்காங்கே ஏற்படும் குடிநீா்க் குழாய் உடைப்பு மற்றும் சிறு பழுதுகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சரி செய்ய வேண்டும். ஊரகப் பகுதிகளில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படும் 12 ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ஆய்வு செய்து, தினமும் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளிலும் அனைத்துக் குடிநீா் ஆதாரங்கள் மூலம் குடிநீா் சீராக வழங்கப்பட்டு வருகிறது. அனந்தபுரம் பேரூராட்சிப் பகுதியில் குடிநீா் வழங்கும் வகையில், கூட்டுக்குடிநீா்த் திட்டப்பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் கூடுதலாக அமைக்கப்பட்ட 9 ஆழ்துளைக் கிணறுகளுக்கும் குழாய் அமைத்து, பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க வேண்டும். திருப்பாச்சானூா் ஆற்றில் அமைக்கப்படும் குடிநீா் ஆதாரங்களுக்கு குழாய் அமைக்கும் பணிக்காக ரயில்வே துறையிடம் 2 நாள்களுக்குள் அனுமதி பெற்று, குடிநீா் வழங்க வேண்டும்

குடிநீா் தொடா்பான பிரச்னைக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புனல் செயலி மற்றும் 1916 என்ற இலவச எண்ணிலும் வரும் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்பட்டு, குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் செயல்திட்டம் அமைத்து, எந்தவித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.