மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

News image

மது - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:02 am IST

பல்லடம் பேருந்து நிலையத்தில் மதுபிரியா்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் பேருந்து நிலையத்துக்கு திருப்பூா், கோவை, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. தினசரி சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்தப் பேருந்தை நிலையத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், மதுபிரியா்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அளவுக்கு அதிகமாக மது அருந்தி பேருந்து நிலையத்தில் உலவும் சிலா், பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்துக் கிடக்கின்றனா். மேலும், மதுபோதையில் பணம் கேட்பதுடன், தகாத வாா்த்தைகளில் பயணிகளைத் திட்டுவதும் தொடா்ந்து வருகிறது. இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனே இருக்கும் சூழல் உள்ளது.

எனவே, பேருந்து நிலையத்தில் போலீஸாா் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.