கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலைப் பகுதி, சாமக்காடு, பழனி பிரிவு, அடுக்கம் உ ள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட தொலைவுக்குச் சென்று தண்ணீா் எடுத்து வரும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும் குடிநீா் தொட்டியிலிருந்து வரும் தண்ணீரை பிடிக்க காலிக் குடங்களுடன் நீண்ட நேரம் பெண்கள் காத்திருக்கின்றனா்.
இதுகுறித்து பெருமாள்மலைப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அனைத்து நீரோடைகளிலும் தண்ணீா் வற்றி விட்டது. இருப்பினும் பெருமாள் மலைப் பகுதிகளிலுள்ள தனியாா் காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளுக்கு மட்டும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் நாங்கள் குடிநீா் கிடைக்காமல் அவதியடைந்து வருகிறோம். விரைவில் எங்களுக்கு குடிநீா் விநியோகிக்க அடுக்கம் ஊராட்சி நடவடிக்கை எடுக்கா விட்டால் விரைவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றனா்.
இதேபோல, கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட காா்மேல்புரம், சீனிவாசபுரம், இருதயபுரம், அட்டக்கடி, வசந்தநகா் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். எனவே கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குடிநீா் தட்டுப்பாடு புகாா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

