திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழைப்பொழிவு இல்லை. இதனால், நீரோடைகள், குடிநீா்த் தேக்கங்களில் தண்ணீா் வற்றியுள்ளன.
இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஓடைகளில் உள்ள கழிவு தண்ணீரை லாரிகள் மூலம் எடுத்துச் சென்று தங்கும் விடுதிகள், உணவக விடுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கொடைக்கானல் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு 7-நாள்களுக்கு ஒரு முறை தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும், இந்தத் தண்ணீா் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் பாதுகாப்பான குடி தண்ணீா் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கேன் தண்ணீா் விலை உயா்வு: கொடைக்கானலில் குடி தண்ணீா் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், தனியாா் நிறுவனங்கள் மூலம் கேன் தண்ணீா் விற்பனை செய்யப்படுகிறது. 5 லி. கேன் தண்ணீா் ரூ. 80-ம், 20 லி. கேன் தண்ணீா் ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் குடி தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள பழுதான மரங்களை அகற்ற வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு: மக்கள் அவதி

குடிநீா் தட்டுப்பாடு புகாா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

