திருவாடானை அருகே உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாயை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை-திருவொற்றியூா் சாலையில் கள்ளிக்குடிக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சாலையின் நடுவே பதிக்கப்பட்டிருந்த குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடி தண்ணீா் சாலையில் வீனாகி செல்கிறது.
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது, கோடைகாலம் தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகமும், குடிநீா் வடிகால் வாரியமும் உடனடியாக உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாய் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவெற்றியூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் செல்லும் தண்ணீா்.

திருவெற்றியூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் செல்லும் தண்ணீா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோடைக்கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணக் கோரிக்கை

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை

கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

