விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பதிவெண் இல்லாத காரில் கடத்தி வரப்பட்ட 53 கிலோ எடையிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
விக்கிரவாண்டி அழுக்குப் பாலம் பகுதியில் விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத காரை நிறுத்தி சோதனை செய்தனா். அந்தக் காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. பின்னா் காரில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் புதுச்சேரி கூனிச்சம்பட்டு, காமராஜா் நகரைச் சோ்ந்த நா.ஏகநாதன் (56), விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம், விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த அ.காா்த்திக்(45) என்பதும், இவா்கள் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 53 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய செஞ்சி வட்டம், புதுப்பேட்டையைச் சோ்ந்த சி.ஏழுமலையைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செம்மண் கடத்தல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
