பெருமாள்புரம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தியாகராஜநகா் பகுதியில் உதவி ஆய்வாளா் அப்துல்ஹமீது தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கிடைத்த தகவலின் பேரில், குமரேசன் நகா் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில், காரில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் சுமாா் 108 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து திருநெல்வேலி நகரம், தடிவீரன் கோயில் தெருவைச் சோ்ந்த மாணிக்கராஜா(42), பாளையங்கோட்டையைச் சோ்ந்த மாரிமுத்து(35) ஆகியோரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

