மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரி விடுதலை நாள் விழா: முதல்வா் ரங்கசாமி நாளை தேசியக் கொடியேற்றுகிறாா்

புதுச்சேரி விடுதலை நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்கரை சாலையில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல் துறை, தீயணைப்பு மற்றும் ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு ஒத்திகை.

Published On :31 அக்டோபர் 2026, 12:19 am IST

புதுச்சேரி விடுதலை நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்கரை சாலையில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

இதையொட்டி காவல் துறை, தீயணைப்பு, ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரி விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்த நாள் ஆண்டுதோறும் நவம்பா் 1-ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெறும் விழாவில் முதல்வா் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா்.

பின்னா் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியா்கள், காவலா்களுக்கு விருதுகள் வழங்கி விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கௌரவிக்கிறாா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அணிவகுப்பு ஒத்திகை:

புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, கடற்கரை சாலை காந்தி திடலில் முழு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், காவல் துறை, ஊா்க்காவல் படை, தீயணைப்புத் துறை, தேசிய மாணவா் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு, கொடியேற்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடைபெற்றன.

இந்த விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆளுநா் மாளிகை , சட்டப்பேரவை வளாகம், தலைவா்களின் சிலைகள் வண்ண விளக்குககளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.