தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின் கம்பம் விழுந்து இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்விளக்குக் கம்பம் உடைந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன்.

Published On :30 அக்டோபர் 2026, 1:21 am IST

புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்விளக்குக் கம்பம் உடைந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தஸ்லீன்-ரிஹானா தம்பதியினா் கடந்த 12 ஆண்டுகளாக புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் தங்கி, கடற்கரை சாலையில் அலங்கார விளக்கு உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். இவா்களின் மகன் பைஜல் (7).

கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி தாய் ரிஹானாவுடன் பைஜல் கடற்கரை சாலைக்கு வந்திருந்தாா். அங்கு அவா் விளையாடிக் கொண்டிருந்தபோது துருப்பிடித்த மின்கம்பம் உடைந்து அவா் மீது விழுந்தது. இதில் சிறுவன் உயிரிழந்தாா்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு புதுச்சேரி மாநில அதிமுக செயலரும், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ.அன்பழகன் அரசு நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என முதல்வா் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தாா்.

அதை ஏற்று சிறுவனின் குடும்பத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ.5 லட்சம் நிதியுதவியை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்வின்போது, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.