மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

30 ஆண்டுகளில் இல்லாத பயங்கரம்! ஏனாமை உலுக்கிய ஒர்னாப் புயல்!

ஏனாமை தாக்கிய புயல் பற்றி..

Yanam

ஒர்னாப் புயல் - X

Published On :28 அக்டோபர் 2026, 3:53 pm IST

புதுச்சேரி ஏனாமில் ஒர்னாப் புயல் தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் ஒர்னாப் புயல் தாக்குதல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வெளியிட்டுள்ள விடியோவில்,

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் காற்றுடன் கூடிய கடுமையான புயல் தாக்கியுள்ளதாகவும், ஏற்கெனவே 110 கி.மீ வேகத்தில் காற்று வீசிய நிலையில், தற்போது 140 முதல் 150 கி.மீ வேகத்தைத் தாண்டி காற்று வீசியுள்ளதாகவும், இந்தப் புயல் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததோடு, வீடுகளும் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சாவித்ரி நகர் மற்றும் கிராமப்பேட்டை பகுதிகளில் கடல் நீர் 4 முதல் 6 அடி வரை உட்புகுந்துள்ளதாகவும், புதுச்சேரி முதலமைச்சர், துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நிலைமையை உடனுக்குடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.

மேலும், அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர்ச் சேதங்களோ அல்லது பெரிய அளவில் காயங்களோ ஏற்படவில்லை. இருப்பினும், விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மீனவர்களின் படகுகளும் வலைகளும் சேதமடைந்துள்ளன. மின்சார விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஜெனரேட்டர்கள் மூலம் 24 இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அரசு தரப்பில் எலுமிச்சை சாதம் மற்றும் உணவுப் பொருள்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நிலைமை விரைவில் சீராகி, இயல்பு வாழ்க்கை முழுமையாகத் திரும்பும் என அமைச்சர் மல்லாடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.