தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒர்னாப் புயல்! ஒடிசாவில் 30,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

தெற்கு மாவட்டங்களில் ஒர்னாப் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு அரசு தீவிர நடவடிக்கை..

Arnab cyclone

ஒர்னாப் புயல் - IMD

Published On :28 அக்டோபர் 2026, 12:16 pm IST

ஒர்னாப் எனும் மிகத் தீவிர புயல் ஆந்திரம் - யானம் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, ஒடிசாவின் தெற்குப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி கூறுகையில்,

ஒர்னாப் புயலால் மாநிலத்தின் அனைத்து தெற்கு மாவட்டங்களும் பாதிக்கப்படக்கூடும், இதில் மல்கங்கிரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆந்திரத்தின் எல்லைக்குள் உள்ள ஒர்னாப் புயல், இன்று பிற்பகலில் ஒடிசாவை வந்தடையும். பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் பணியாளர்களும் உபகரணங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கஞ்சம், கஜபதி, ராயகடா, கோராபுட், மல்கங்கிரி மற்றும் நபரங்க்பூர் ஆகிய மாவட்டங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

மாநிலத்திலுள்ள 30 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் 2,037 புயல் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு உணவு, குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கலாஹண்டி, கந்தமால், நுவாபடா மாவட்ட நிர்வாகங்களும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. தெற்கு மாவட்டங்களில் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், இதுவரை பெரிய அளவிலான சேதங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, 'ஒர்னாப்' மிகத் தீவிர புயலாக ஆந்திரப் பிரதேசம்-யானம் கடற்கரைப் பகுதியை இன்று அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிக்குள் கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ வரை இருந்தது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ஒடிசாவின் சில பகுதிகள் வழியாக நகர்ந்து, பின்னர் வடமேற்கு திசையில் சத்தீஸ்கரை நோக்கிச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.