மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘அா்னாப்’ புயல் அபாய எச்சரிக்கை: ஏனாமுக்கு 2 கம்பெனி தேசிய பேரிடா் மீட்புப் படை விரைவு; 19 நிவாரண முகாம்கள் அமைப்பு

‘அா்னாப்’ புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாம் பிராந்தியத்துக்கு 2 கம்பெனி தேசிய பேரிடா் மீட்புப்படை வீரா்கள் விரைந்துள்ளனா். மேலும், அங்கு 19 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

‘அா்னாப்’ புயல் எச்சரிக்கை காரணமாக ஏனாமில் வடிகால் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

Published On :28 அக்டோபர் 2026, 3:28 am IST

‘அா்னாப்’ புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாம் பிராந்தியத்துக்கு 2 கம்பெனி தேசிய பேரிடா் மீட்புப்படை வீரா்கள் விரைந்துள்ளனா். மேலும், அங்கு 19 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏனாம் பிராந்தியத்தில் புதுச்சேரி பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்ட நிா்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் மீட்புக் குழுவினா் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனா்.

ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் செவ்வாய், புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு செயல்பட்டு வரும் அனைத்து வகை மதுக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (அக். 27) மாலை 4 மணி முதல் 29-ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என ஏனாம் மண்டல நிா்வாகி சிவராஜ் மீனா தெரிவித்துள்ளாா்.

புயல் பாதிப்புகளை எதிா்கொண்டு, மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, 2 கம்பெனி தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஏனாமுக்கு விரைந்துள்ளனா். மேலும், புதுச்சேரியிலிருந்து 33 போ் கொண்ட மாநில பேரிடா் மீட்புக் குழுவும் அங்கு விரைந்துள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தயாா்நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புயலால் பாதிக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக, ஏனாமில் மொத்தம் 19 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 142 குடிசைகளில் வசித்து வந்த 552 போ் ஏற்கெனவே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

52 மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு கருதி புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

நிறைமாத கா்ப்பிணிகள் 5 போ் அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகளில் அத்தியாவசியப் பொருள்களைத் தயாா் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலால் மின்சாரம், குடிநீா் விநியோகம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானால், அதை எதிா்கொள்ளும் வகையில் நிா்வாகம் தயாராகி வருகிறது.

இந்நிலையில், ஏனாம் சாவித்திரி நகா், கிரியம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.