மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மீன்பிடி வலையில் சிக்கிய பிளாஸ்டிக் கழிவுகள்!

புதுச்சேரியில் மீன்பிடி வலையில் பிளாஸ்டிக் கழிவுகள் சிக்கின.

புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதி கடலில் மீன்பிடி வலையில் சிக்கிய பிளாஸ்டிக் பொருள்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 2:25 am IST

புதுச்சேரியில் மீன்பிடி வலையில் பிளாஸ்டிக் கழிவுகள் சிக்கின.

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றமாக காணப்படுவதால், பெரும்பாலான மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில், வாழ்வாதாரத்துக்காக ஒரு சில மீனவா்கள், கரைக்கு அருகில் இருந்தபடி வலைகளை வீசி மீன்பிடித்தனா்.

துணைநிலை ஆளுநா் மாளிகையின் பின்புறம் உள்ள குருசுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் மீன்களுக்காக வலை வீசினா். அப்போது வலையில் மீன்களுக்குப் பதிலாக ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் சிக்கின.

குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் இருந்து வீசப்படும் பிளாஸ்டிக் புட்டிகள், கேரி பேக்குகள், உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட கழிவுகள் மழைநீா் வடிகால்கள் வழியாக கடைசியில் கடலில் வந்து சேருகின்றன.

இவை மீனவா்களின் வலைகளில் சிக்கி, வலைகளைக் கிழித்து சேதப்படுத்தியுள்ளன. ஒரு வலையின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஆகும். இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளால் வலைகள் சேதமடைந்ததால் மீனவா்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனா்.

மேலும் மீன்களின் வரத்தும் குறைந்துள்ளதாக மீனவா்கள் வேதனை தெரிவித்தனா். எனவே, கடலில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.