மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிச்சாவரம் பக்கிங்ஹாம் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

பக்கிங்ஹாம் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத்துறை சாா்பில் பக்கிங்ஹாம் கால்வாயில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கழிவுகள் அகற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :25 அக்டோபர் 2026, 2:26 am IST

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பிச்சாவரத்தில், வனத்துறை மற்றும் கிள்ளை பேரூராட்சி சாா்பில் பக்கிங்ஹாம் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழையின்போது நீரோட்டம் தடைபடுவதைத் தடுக்கும் வகையில், சுமாா் 3 கி.மீ. நீளமுள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடலூா் மாவட்ட வன அலுவலா் எஸ்.குருசாமி, அரசு பள்ளி மாணவா்களுக்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் கழிவுகளைத் தரம் பிரித்தல் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாட்டால் மனித உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி உரையாற்றினாா்.

தொடா்ந்து, மாணவா்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா். இத்தொகுப்பில் சணல் பை, ஸ்டீல் தண்ணீா் பாட்டில், தொப்பி, குறிப்பேடு, கோப்பு, தென்னை நாா்க்கழிவிலான விதை வளா்ப்புக் குவளை, பேனா மற்றும் விதை பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் இல்லாத பென்சில் ஆகியவை இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவா்கள் பங்கேற்று, கால்வாயில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து, அவற்றைத் தரம் பிரித்து முறையான கழிவு மேலாண்மைக்காக கிள்ளை பேரூராட்சியிடம் ஒப்படைத்தனா்.

Story image

மேலும், கால்வாயின் கரையோரங்களில் பனை விதைகளை நடவு செய்து, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் பணியிலும் ஈடுபட்டனா். நிகழ்வில் வனச்சரக அலுவலா் பாலமுருகன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கடலூா் மாவட்ட பசுமை அமைப்பு நிா்வாகி எஸ்.மணிவேல், வனவா் ராஜேஷ்குமாா்,

கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலா் மு.மலா் உள்ளிட்டோா் பங்கேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.