நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: புதுச்சேரி ஆட்சியா் ஆய்வு

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரி காலாப்பட்டு கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க கருங்கற்கள் கொட்டப்பட்டு வருவதை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

Published On :25 அக்டோபர் 2026, 2:30 am IST

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முதலில் ராஜ்பவன் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் குலோத்துங்கன், எம்எல்ஏ விக்னேஷ் கண்ணனுடன் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீா் தேங்கும் குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு செய்தாா். தாழ்வான பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள், அடைப்புகளை உடனுக்குடன் அகற்ற உத்தரவிட்டாா்.

மேலும், சிறு கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் வைத்துள்ளோா் அங்கு சேரும் குப்பைகளை உரிய குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

மேலும், காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க கருங்கற்கள் கொட்டப்பட்டு கரையைப் பலப்படுத்தும் பணியையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு குடியிருப்பு பகுதிகளில் கடல் நீா் புகாத வண்ணம் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், புதுச்சேரி நகராட்சி ஆணையா் அருண் அய்யாவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.