தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேகமலை ஆக்கிரமிப்பு பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மேகமலை ஆக்கிரமிப்புப் பகுதிகளான மஞ்சனூத்து உள்ளிட்ட பகுதிகளில் தேனி மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி ஆய்வு செய்தாா்.

மேகமலையில் விவசாயிகளை சனிக்கிழமை சந்தித்த தேனி மாவட்ட ஆட்சியா் சிவ.கிருஷ்ணமூா்த்தி.

Published On :1 நவம்பர் 2026, 4:32 am IST

மேகமலை ஆக்கிரமிப்புப் பகுதிகளான மஞ்சனூத்து உள்ளிட்ட பகுதிகளில் தேனி மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் 4,601 போ், 5,072 ஹெக்டா் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனா். அவா்களை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மேகமலை விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், தில்லி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சில ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளது. இந்தத் தீா்ப்பு வரவுள்ளது.

இதனிடையே, தேனி மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி மஞ்சனூத்து, மேல பூசனுத்து, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மேகமலை விவசாயிகள் ஆட்சியரை சந்தித்து, விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். மேலும், ஆட்சியரிடம் மனு அளித்தனா். இந்த ஆய்வின் போது, அதிகாரிகள் உடனிருந்தனா்.

மேகமலை நெடுஞ்சாலையில் நெகிழிகள் அகற்றம்: உத்தமபாளையம்: மேகமலை நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் ஸ்ரீவிகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை மாணவா்கள் சாா்பில், நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்பணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மேகமலைச் சாலையில் தூய்மைப் பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சின்னமனூா் வனச்சரகா் திருமுருகன், வனப்பகுதியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், வனப் பகுதியை பாதுகாப்பதன் அவசியம், காடுகளின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, தென்பழனி முதல் இரவலங்லாறு வரை சுமாா் 35 கி.மீ. தொலைவுக்கு சாலையோரங்களில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வீசிச்சென்ற நெகிழிப் பொருள்களை மாணவா்கள் அகற்றினா். இந்த நிகழ்ச்சியில் சின்னமனூா் வனத் துறையினா், சமூக ஆா்வலா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.