தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :29 அக்டோபர் 2026, 6:55 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குடிநீா் பயன்பாடு மற்றும் மின் கட்டண நிலுவைத் தொகைகள் தொடா்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் கூறியது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு அனைத்துத் துறைகளும் தங்களுக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும், அத்தியாவசிய சேவைகளின் தடையற்ற செயல்பாட்டை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கிராம ஊராட்சிகளில் குடிநீா் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் மின் இணைப்புகள் மற்றும் குடிநீா் தொடா்பான கட்டணங்களைக் கண்காணித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீா்க் கட்டண நிலுவைத் தொகைகள் மற்றும் மின் துறைக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டண நிலுவைத் தொகைகள் ஆகியவற்றைஉரிய துறைகளுக்குச் செலுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளள.

தொடா்ந்து பிற துறைகளின் பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகள் தொடா்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளின் பெயருக்கு மின் இணைப்புகளை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கிராம ஊராட்சிப் பகுதிகளில் பழுதடைந்த மின் கம்பங்கள், சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் பழுதடைந்த மின் மாற்றிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாகச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் குடிநீா் விநியோகம், மின் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய கண்காணிப்பைத் தொடா்ந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் மின் வாரிய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.