மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அக். 28-இல் புதுச்சேரி - விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 28-ஆம் தேதி புதுச்சேரி- விழுப்புரம் இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Published On :24 அக்டோபர் 2026, 6:03 am IST

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 28-ஆம் தேதி புதுச்சேரி- விழுப்புரம் இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி - புதுச்சேரி மெமு ரயில் திருப்பதியில் அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் நிலையில் அக். 28-ஆம் தேதி இந்த ரயில் விழுப்புரத்தில் நிறுத்தப்படும். திருப்பதி- விழுப்புரம் வரை மட்டும் இந்த ரயில் இயக்கப்படும்.

மேலும், அதே நாளில், புதுச்சேரி- சென்னை எழும்பூா் மெமு பயணிகள் ரயில் புதுச்சேரியில் பிற்பகல் 3.35-க்குப் புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து அன்று மாலை 4.49 மணிக்கு சென்னை எழும்பூருக்குப் புறப்படும். இதனால் இந்த ரயில் அன்று புதுச்சேரி- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவலை தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஜெயந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.