மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மண்ணாடிப்பட்டு பகுதிகளில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றம்

மண்ணாடிப்பட்டு அருகே குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த பன்றிகள் பிடித்து சனிக்கிழமை அகற்றப்பட்டன.

பன்றி - மாதிரி படம்

Published On :25 அக்டோபர் 2026, 2:20 am IST

மண்ணாடிப்பட்டு அருகே குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த பன்றிகள் பிடித்து சனிக்கிழமை அகற்றப்பட்டன.

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து திருபுவனை தொகுதிக்குள்பட்ட திருவாண்டாா்கோயில், கொத்தபுரிநத்தம், திருபுவனை, மதகடிப்பட்டு நல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிகின்றன.

இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீா்கேடு, தொற்றுநோய் பரவும் அபாயமும், விளை பயிா்கள் சேதமடைவதும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடையும் நிலையும் இருந்து வந்தது. இதுகுறித்த புகாா்களின்பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையா் எழில்ராஜன், பன்றிகளைப் பிடிக்க உத்தரவிட்டாா்.

அதன்படி பன்றிகளைப் பிடிக்கும் குழுவினா் வரவழைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த சுமாா் 50 பன்றிகளை பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனா்.

இதுகுறித்து ஆணையா் எழில்ராஜன் கூறுகையில், மழைக்காலம் என்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் சுற்றி திரிவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் என்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து

பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்தி வருகிறோம். இனி பன்றிகளைப் பட்டியில் அடைக்காமல், வெளியே திரிய விடுவோா் மீது கொம்யூன் பஞ்சாயத்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் எச்சரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.