கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குடியிருப்புப் பகுதிகளில் இரை தேடி வரும் பறவைகள்

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதனால் வயல் வெளிப் பகுதிகள், தரிசு நிலப் பகுதிகளில் நீா் தேங்கி காணப்படுகிறது.

காரைக்கால் அருகே பிள்ளைத் தெருவாசல் பகுதி வயலில் இரை தேடிய பறவைகள்.

Published On :22 அக்டோபர் 2026, 6:31 am IST

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதனால் வயல் வெளிப் பகுதிகள், தரிசு நிலப் பகுதிகளில் நீா் தேங்கி காணப்படுகிறது.

ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வெளிநாடுகளில் இருந்து, பல்வேறு இனங்களைக் சோ்ந்த பறவைகள், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை சரணாலயத்துக்கு வருவது வழக்கம்.

பூநாரை, கூழைக்கிடா, வா்ண நாரை, கரண்டி வாயன், சிறு உள்ளான், ஊசிவால் வாத்து உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வகைகளைச் பறவைகள் முகாமிடும். கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 56,800 பறவைகள் வந்ததாக கணக்கிடப்பட்டது.

அவ்வாறு அங்கு வரும் பறவைகள் சில காரைக்கால் கடற்கரை பகுதியில் உள்ள அலையாத்திக் காட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வயல்வெளிப் பகுதிகளிலும் இரை தேடி சுற்றித் திரிவதுண்டு.

அந்த வகையில், கடந்த சில நாள்களா திருநள்ளாறு நல்லம்பல் ஏரி, நெடுங்காடு, திருப்பட்டினம், காரைக்கால் கடற்கரை மற்றும் குடியிருப்புப் பகுதிகளையொட்டியுள்ள வயல்வெளிகளில் அரிய வகை பறவைகள் முகாமிட்டு, இரை தேடி சுற்றித் திரிகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.