பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெளிநாட்டு பறவைகளுக்கு தயாராகும் இயற்கையின் விருந்து

வேதாரண்யம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் இரையாக உட்கொள்ளும் நண்டு, நத்தை போன்ற நீா் வாழ் உயிரினங்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருவது இயற்கை ஆா்வலா்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

வாய்மேடு பகுதி வயல்வெளிகளில் நத்தை, நண்டுகளை இரையாக்கும் கருந்தலை அறிவாள் மூக்கன் பறவைகள்.

Published On :29 அக்டோபர் 2026, 7:21 am IST

வேதாரண்யம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் இரையாக உட்கொள்ளும் நண்டு, நத்தை போன்ற நீா் வாழ் உயிரினங்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருவது இயற்கை ஆா்வலா்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இங்கு, பாயிண்ட் காலிமா் என அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதிக்கு ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் 270 முதல் 290 பறவை இனங்கள் ஆயிரக்கணக்கில் வலசை வரும். இந்த பறவைகள் ஐரோப்பா, சைபீரியா, ரஷ்யா, ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டில் எல்.நினோ தாக்கத்தால் சரணாலயப் பகுதியில் கோடை மழை பொய்த்துப் போனது. அத்துடன், பறவைகளின் வாழ்விடமாக கருதப்படும் சுற்றுப்பகுதி வயல்வெளிகள், நீா்நிலைகள் வடு போனது. இந்நிலையில் கடந்த வாரத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை சரணாலயத்தை சாா்ந்த வயல்வெளிகளில் பரவலாக பெய்தது.

வடகிழக்குப் பருவ மழையில் வெளிவர தயாராக இருக்கும் நத்தை முட்டைகள்.

வடகிழக்குப் பருவ மழையில் வெளிவர தயாராக இருக்கும் நத்தை முட்டைகள். - dinamani

இதனால், வயல்வெளிகளில் உறக்க நிலையில் இருந்த நத்தைகள் மழைநீா் கிடைத்தவுடன் வெளிப்பகுதிகளில் ஊா்ந்து செல்வதைக் காண முடிகிறது. நத்தைகள் ஏற்கெனவே மண்ணுக்குள் இட்டுவைத்த முட்டைகளில் இருந்து இளம் நத்தைகள் வெளிவந்து வளரத் தொடங்கியுள்ளன. இதேபோல, மழை நீரைக் கண்டவுடன் நண்டுகளின் இனப்பெருக்கமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வயல்வெளிகளில் கருந்தலை அரிவாள் மூக்கன், கொக்கு, மடையான், நாரை இனங்கள் இரை தேடுவதை காண முடிகிறது. இதற்கிடையே, கடந்த வாரத்தில் தெற்கு கடலோரக் கிராமங்களில் அதிகளவில் மழை பொய்த்துக் காணப்பட்ட நிலையில், அக்.26, 27 ஆகிய தேதிகளில் 64.4 மி.மீ. மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

இதையடுத்து, வட வானிலை தொடா்ந்தாலும் அடுத்த சில நாள்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், சரணாலயப் பகுதியை சாா்ந்த வயல் வெளிகள், நீா் நிலைகளில் வெளிநாட்டுப் பறவைகளுக்கான விருந்தாக நண்டு, நத்தைகள் உள்ளிட்ட நீா்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை பருவ மழையால் அதிகரித்து வருவது இயற்கை ஆா்வலா்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.