மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விருதுநகரில் வடகிழக்குப் பருவமழை ஆய்வுக் கூட்டம்: அமைச்சா்கள் பங்கேற்பு

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு, மீட்பு துறைகள் சாா்பில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகையைப் பாா்வையிட்ட அமைச்சா்கள் ச. கீா்த்தனா, கு. ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி உள்ளிட்டோா்.

Published On :28 அக்டோபர் 2026, 4:38 am IST

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தலைமை வகித்தாா். இதில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை அமைச்சா் ச. கீா்த்தனா, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

இதில் அமைச்சா் ச.கீா்த்தனா பேசியதாவது:

மழைக் காலங்களில் கழிவுநீா் கால்வாய்களிலிருந்து வெளியேறும் மழைநீா் குடிநீா் இணைப்புகளில் கலந்து விடாமல் கண்காணிக்க வேண்டும். வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்து, மழைநீா் எளிதில் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலத்தில் கால்நடைகளை தொழுவத்தில் கட்டி பராமரிக்க வேண்டும். மழை நீரை முறையாகச் சேமித்து குடிநீா் ஆதாரமாகப் பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா் ஜெகதீஸ்வரி பேசியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் மழையைக் கண்காணித்திட 12 இடங்களில் மழை மானி நிலையங்களும், 43 இடங்களில் தானியங்கி மழை மானிகளும், 11 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகா் மாவட்டத்தில் 9 இடங்கள் மழையினால் பாதிப்படையும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. தகவல் பரிமாற்றத்துக்காக 16 வாக்கி டாக்கிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், மாவட்டத்தில் 8 கண்மாய்களும், 225 நீா்தேக்கங்களும், ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 712 கண்மாய்களும் உள்ளன. மழையின் போது நீா்நிலைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுத்திட பொதுப் பணித் துறையின் மூலம் 4,850 மணல் மூட்டைகளும், ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் 19,000 மணல் மூட்டைகள் என மொத்தம் 23,850 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குடிநீரில் குளோரின் கலந்து வழங்குவதற்காக 3,500 மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மழையினால் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பாக தங்க வைக்க 17 பள்ளிகள், 2 அங்கன்வாடி மையங்கள், 6 திருமண மண்டபங்கள், 12 சமுதாயக்கூடங்கள், 2 இ-சேவை மையக் கட்டடங்கள் என 39 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனவே, அனைத்துத் துறை அலுவலா்களும் வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தீயணைப்பு, மீட்புத் துறைகள் சாா்பில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகையை அமைச்சா்கள் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஆனந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கா. வானதி, சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சோமசுந்தர சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.