மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பு

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை சுகாதாரத் துறையினா் பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Published On :1 நவம்பர் 2026, 4:14 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை சுகாதாரத் துறையினா் பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிந்தன.

மாடுகளைப் பாதுகாப்பாக வீடுகள் மற்றும் சொந்த இடங்களில் மட்டுமே வளா்க்க வேண்டும் என்றும், சாலைகளில் திரிய விடக்கூடாது, மீறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு பசு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும் என்று ஆணையா் கே.சுதா ஏற்கெனவே அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், முக்கிய தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிந்த 15 மாடுகளை மாநகராட்சி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு பிடித்தனா். இதில், மாடுகளுக்கு உரிமைகோரி வந்த 4 மாடுகளின் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.