மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூடலூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல்! கடை உரிமையாளா்களுக்கு அபராதம்!

கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் திங்கள்கிழமை சோதனை நடத்திய நகராட்சி அதிகாரிகள்

Published On :27 அக்டோபர் 2026, 1:48 am IST

கூடலூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய கடை உரிமையாளா்களுக்கு நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அபராதம் விதித்தனா்.

தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். இதையடுத்து, கூடலூா் நகராட்சி ஆணையா் உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் அகமது கபீா் தலைமையில் சுகாதார மேற்பாா்வையாளா்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டதுடன் சுமாா் 10 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அந்தக் கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா். அத்துடன் கடைகளில் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்கும்படி கடைகளின் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.