மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

மதுரை மாநகராட்சிப் பகுதி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தெரிவித்தனா்.

மதுரை கூடல்நகா் பகுதி சாலையில் வியாழக்கிழமை சுற்றித் திரிந்த கால்நடைகள்.

Published On :30 அக்டோபர் 2026, 4:28 am IST

மதுரை மாநகராட்சிப் பகுதி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தெரிவித்தனா்.

மதுரை மாநகராட்சிப் பகுதி சாலைகளில் தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலைகளில் நாள்தோறும் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமன்றி, விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

இதுகுறித்து மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் அளித்த புகாா்களின் பேரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மதுரை மாநகராட்சி அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் இணைந்து சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளைப் பிடித்து கோசாலைகளில் ஒப்படைத்தனா்.

தற்போது, இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதனால், சாலைகளில் அதிகளவில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. எனவே, மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து கோசாலைகளில் ஒப்படைக்க முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.