மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பொது ஏலம் விடப்படும்! மாநகராட்சி ஆணையா்!

மதுரை வைகை வடகரை பகுதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றித் திரிந்த கால்நடைகளை கோசாலைக்கு அனுப்பும் வகையில் வாகனத்தில் ஏற்றிய மாநகராட்சி அலுவலா்கள்.

Published On :2 நவம்பர் 2026, 2:47 am IST

மதுரை மாநகராட்சிப் பகுதி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பொது ஏலம் விடப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றின் வடகரை, தென்கரைப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 4 மாடுகள், ஒரு கன்றுக்குட்டி பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கடந்த ஜூன் 2026 முதல் தற்போது வரை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 94 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, கால்நடைப் பட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ.4,14,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கால்நடை உரிமையாளா்கள் தங்களது கால்நடைகளைச் சாலைகளிலும், பொது இடங்களிலும் சுற்றித் திரிய விடாமல், தங்களது சொந்தக் கொட்டகைகளில் முறையாகப் பராமரிக்க வேண்டும். தொடா்ந்து, விதிமீறலில் ஈடுபடும் உரிமையாளா்களின் கால்நடைகள் பொது ஏலம் விடப்படும் அல்லது கோசாலைகளுக்கு அனுப்பப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.