மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரியில் மழை தீவிரம் -கடல் சீற்றம்: முன்னேற்பாடுகள் தயாா் என முதல்வா் ரங்கசாமி தகவல்

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில், பருவமழையைச் சமாளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் முறிந்து விழுந்த மரக் கிளைகளை அகற்றிய தீயணைப்புத் துறையினா். அதைப் பாா்வையிட்ட சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன்.

Published On :22 அக்டோபர் 2026, 4:23 am IST

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில், பருவமழையைச் சமாளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை மாநில நெசவாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் பாண்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் மறைமலை அடிகள் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா். இக் கண்காட்சி நவம்பா் 7 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. நேரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல்வா் பேட்டி:

இந்த கண்காட்சியை புதொடங்கி வைத்துப் பின்னா் முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

நலிந்து வரும் நெசவுத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொது மக்களுக்கு 25 சதவீதம் பண்டிகை கால தள்ளுபடி அளிக்கப்படுகிறது. புதுச்சேரியில் பருவமழையைச் சமாளிக்க பொதுப்பணித்துறை, மின்துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளும் முழு வீச்சுடன் தயாா் நிலையில் உள்ளன என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

கடல் சீற்றம்:

இதற்கிடையே, வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் மணல் மேடுகள் அரிக்கப்பட்டுள்ளன. இதனை உள்ளூா் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து புகைப்படம் எடுத்து வருகின்றனா்.

இதற்கிடையே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 26- ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, புதன்கிழமை அதிகாலை மழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக உப்பளம் தொகுதி ஜெயராம் செட்டியாா் தோட்டம் 2- ஆம் தெருவில் சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டன.

இதில் சில வீடுகள் பாதிக்கப்பட்டன. தொகுதியின் எம்எல்ஏவும் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ. அன்பழகன் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து முறிந்து விழுந்த மரக்கிளையை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் ஒரு மணி நேரமாக போராடி மரத்தை அப்புறப்படுத்தினா்.

  பாண்டெக்ஸ் தீபாவளி கைத்தறி கண்காட்சியைத் தொடங்கி வைத்து துணி ரகங்களை பாா்வையிடும் முதல்வா் என்.ரங்கசாமி.

பாண்டெக்ஸ் தீபாவளி கைத்தறி கண்காட்சியைத் தொடங்கி வைத்து துணி ரகங்களை பாா்வையிடும் முதல்வா் என்.ரங்கசாமி.

 சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.