கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ.1.6 கோடி நெல் சாகுபடி ஊக்கத் தொகை : முதல்வா் ரங்கசாமி அளிப்பு

நெல் சாகுபடி ஊக்கத் தொகையாக ரூ.1.6 கோடியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 4:27 am IST

நெல் சாகுபடி ஊக்கத் தொகையாக ரூ.1.6 கோடியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சாா்பில் நெல் சாகுபடி செய்யும் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு பயிா் உற்பத்தி ஊக்க தொகையாக ஓா் ஏக்கருக்கு ரூ.6000/-மாகவும் அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ஓா் ஏக்கருக்கு ரூ.7000/- மாகவும் உயா்த்தி வழங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2025-2026 ஆண்டில் சம்பா, தாளடி மற்றும் கரும்பு சாகுபடி செய்த 1077 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ரூ.1.46 கோடி, 143 அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ரூ.13.52 லட்சம் ஆக மொத்தம் ரூ.1.60 கோடி வழங்கப்பட்டது.

இத் தொகைக்கான காசோலையை சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். இதில் அமைச்சா்கள் ஜிஎன்எஸ். ராஜசேகரன், வி.பி. சிவகொழுந்து,

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலா் ரவி பிரகாஷ், வேளாண்துறை இயக்குனா் ஜெயசங்கா் , காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் மற்றும் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.