தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

என்விஎஸ்-03 செயற்கைகோள் நிலைநிறுத்தம்: புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி வாழ்த்து

நவீன என்விஎஸ்-03 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தி சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகளுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:23 am IST

நவீன என்விஎஸ்-03 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தி சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகளுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜிஎஸ்எல்வி-எப் 18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2,250 கிலோ எடை கொண்ட அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோளான என்விஎஸ்-03, திட்டமிடப்பட்ட புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதையொட்டி, இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு மேலும் வலுசோ்க்கும் வகையில், நேவிக் பிராந்திய செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பை மேம்படுத்துவதற்காக என்விஎஸ்-3 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள், பொறியாளா்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளா்கள் அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் தேவைகளுக்கேற்ப துல்லியமான இருப்பிடத் தகவல் மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்கும் நேவிக் அமைப்பு, விண்வெளித் துறையில் இந்தியாவின் தன்னிறைவை வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாகும்.

இந்த அமைப்பை மேம்படுத்துவதற்கான இஸ்ரோவின் அா்ப்பணிப்பும், அயராத உழைப்பும் பாராட்டுக்குரியவை.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தொடா்ந்து முன்னேற்றம் காண்பது அனைவருக்கும் பெருமிதம் அளிப்பதுடன், மாணவா்களுக்கும் இளைஞா்களுக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சாதிக்க ஊக்கமளிக்கும் உந்துசக்தியாகத் திகழ்கிறது.

இந்த விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக அமைந்து, என்விஎஸ்-3 செயற்கைக்கோள் அதன் நோக்கங்களைச் சிறப்பாக நிறைவேற்ற புதுச்சேரி மக்கள் சாா்பிலும் எனது சாா்பிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் அறிவியல் ஆற்றல் மேலும் உயரட்டும். இஸ்ரோவின் சாதனைப் பயணம் தொடா்ந்து சிறக்கட்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.