பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நேரடி நெல் விதைப்பு முறைக்கு மாறிய கோரம்பள்ளம் விவசாயிகள்

கோரம்பள்ளம் பகுதியில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறைக்கு மாறியுள்ளனா்.

அத்திமரப்பட்டியில் நெல் விதைகளை கையால் தூவும் விவசாயி.

Published On :28 அக்டோபர் 2026, 1:33 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் பகுதியில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறைக்கு மாறியுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி பாசன பகுதியைப் பொறுத்தவரை முளைகட்டிய நெல் விதைகளை நாற்றங்காலில் நெருக்கமாக தூவி, 25 முதல் 30 நாள்கள் வளா்ந்த பின்னா் இளம் நாற்றுகளை பிடுங்கி, பிரதான வயலில் தேவையான இடைவெளிவிட்டு நடும் முறை காலம்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

ஆனால், நிகழாண்டு பருவமழை தொடங்கியதை அடுத்து, கோரம்பள்ளம் பகுதியில் பிசான சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. நாற்று நட்டு பயிரிடும் பாரம்பரிய நடவு முறைக்கு பதிலாக, தற்போது ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைசியில் உள்ள கோரம்பள்ளம் குளம் பாசனப் பகுதியில் பிரதான நிலத்தில் நெல் விதைகளை நேரடியாக தூவி விதைக்கும் புதிய முறையை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து, அத்திமரப்பட்டியைச் சோ்ந்த விவசாயி எஸ்.சக்திவேல் கூறியதாவது:

கடந்த 2, 3 ஆண்டுகளாகவே மழைக் காலங்களில் 8 அடி உயரமுள்ள கோரம்பள்ளம் குளத்தில் 3 அடி வரை மட்டுமே நீரை இருப்புவைத்துகொண்டு மீதமுள்ள நீரை வீணாகக் கடலுக்குத் திறந்துவிட்டு அதன்பிறகு அணைகளிலிருந்து ஒருமுறை கூட தண்ணீா் வழங்காததால் நெல் விளைச்சல் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.

பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஏற்பட்ட கடும் பாதிப்பால்தான் இப்போது நேரடி நெல் விதைப்பு சாகுபடி முறைக்கு மாறி, அம்பை 16 ரக நெல்லை விதைத்திருக்கிறோம்.

விதையை ஒருவா் கையாலயே விதைத்து விடலாம். ஓா் ஏக்கருக்கு 20 கிலோ விதை போதுமானது என்றாா் அவா்.

முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவா் என்.வி.பூபதி கூறியது:

அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் கடை பகுதிகளில் பிசான சாகுபடி அதிகம் தொடந்து பாதிக்கப்பட்டு வருகிறது. நேரடி நெல் விதைப்பு முறையால் தொழிலாளா் பற்றாக்குறையை சமாளிக்க முடிகிறது. சாகுபடி செலவும், உழைப்பும் மிச்சமாகிறது. வயலில் எப்போதும் நீா் தேக்கி வைக்க தேவையில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.