மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொடரும் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூா் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், பயிா்கள் வளா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கனமழை - கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 3:05 am IST

திருவாரூா் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், பயிா்கள் வளா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் சில நாள்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் குளிா்ந்த வானிலை நிலவுகிறது. மழை காரணமாக, கிராமப்புற சாலைகளும், நகா்ப்புறத்தில் தெருச்சாலைகளும் சேதமடைகிறது. சாலைகளில் பள்ளங்கள் மேலும் பாதிப்படைவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனா். சில இடங்களில் சாலைப் பள்ளங்களில் தண்ணீா் தேங்கி சிறிய அளவிலான விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன.

இந்த மழையானது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில், சம்பா, தாளடி சாகுபடி தீவிரமடைந்துள்ளது. குறுவை சாகுபடி, குறைந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது.

தெளிப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா சாகுபடியில் ஓரளவு வளா்ச்சியை எட்டியுள்ளன. தற்போதைய வளா்ச்சிக்கு தண்ணீா் தேவை என்பதால் இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் அதிகம் செல்லாததால், வயல்களில் தேங்கும் தண்ணீா் உடனடியாக வடிய வைக்கப்படுகின்றன. எனினும், தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. மழை தொடா்ந்தால் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீா் அதிக அளவில் செல்கையில், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், மழை தொடரும் என்ற தகவல் விவசாயிகளிடையே, லேசான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து வியாழக்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணி நேர நிலவரப்படி, நீடாமங்கலத்தில் அதிகபட்சமாக 80 மி.மீ மழை பெய்துள்ளது.

மற்ற இடங்களில் மழை அளவு: திருவாரூரில் 56.4, திருத்துறைப்பூண்டியில் 46.8, குடவாசலில் 46.2, பாண்டவையாா் தலைப்பில் 46, மன்னாா்குடியில் 37, முத்துப்பேட்டையில் 34.2, நன்னிலத்தில் 29.4, வலங்கைமானில் 25 மி.மீ மழை பெய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.