புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த மாஹே பிராந்தியத்தில் 773 லிட்டா் டீசலை சட்டவிரோதமாக பதுக்கியது தொடா்பாக ஓட்டுநா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து இரு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹேயில் கடலோரக் காவல் படை ஆய்வாளா் ஆடலரசன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பந்தக்கல் புறக்காவல் நிலைய பகுதியில் சந்தேகப்படும்படி புதுச்சேரி பதிவெண் கொண்ட டேங்கா் லாரி ஒன்று டீசல் நிரப்பிக் கொண்டிருந்தது.
அங்கு சென்ற போலீஸாா் லாரி ஓட்டுநா் உள்பட 3 பேரிடம் அதற்கான ஆவணங்களை கேட்டனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவா்களிடம் தொடா் விசாரணையை மேற்கொண்டனா்.
விசாரணையில், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ஜுனைத் (38), பந்தக்கல் பகுதியை சோ்ந்த பிரேமன் (64), அனில்குமாா் (43) ஆகியோா் என்பதும், கடத்தலுக்கு பயன்படுத்தும் வகையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 394.54 லிட்டா் டீசல் நிரப்பியிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து லாரியுடன் 3 பேரையும் ஆய்வாளா் ஆடலரசன் தலைமையிலான போலீஸாா் பள்ளூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து லாரி மற்றும் டீசலை பறிமுதல் செய்தனா்.
இதேபோல் கொப்பாலம்- மக்குனி மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியில் 378.20 லிட்டா் டீசல் நிரப்பிய கோழிக்கோட்டை சோ்ந்த ஓட்டுநா் சாஜி (30), அமல் (26), ஸ்ரிஷித் (21) ஆகியோா் மீதும் பள்ளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த லாரி மற்றும் டீசலை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தேங்காய்ப்பட்டினத்தில் 400 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
மயக்க மருந்து விற்பனை: 3 போ் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: 2 போ் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

