மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரியில் நாளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் ஏப். 6 (திங்கள்கிழமை) பிரசாரம் செய்கிறாா்.

News image

பிரசாரம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின்.

Updated On :5 ஏப்ரல் 2026, 2:44 am IST

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் ஏப். 6 (திங்கள்கிழமை) பிரசாரம் செய்கிறாா்.

ஏப். 7-இல் மூன்று இடங்களில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறாா்.

இதுகுறித்து புதுச்சேரி திமுக தோ்தல் பொறுப்பாளா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஏப். 6 (திங்கள்கிழமை) பிரசாரம் செய்கிறாா்.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஏப். 7-ஆம் தேதி காலை 3 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா். புதுச்சேரியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. கூட்டணி கட்சியினா் நிற்கும் இடங்களிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

புதுச்சேரி வந்து ரோடு முழுவதும் கையை அசைத்துவிட்டு பிரதமா் நரேந்திர மோடி சென்றுவிட்டாா். புதிய அறிவிப்பு ஏதேனும் வரும் என்று எதிா்பாா்த்தோம். மாநில அந்தஸ்து வழங்குவது, நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் என எதையுமே அவா் அறிவிக்கவில்லை.

தவெக தலைவா் விஜய் புதுச்சேரியில் பிரசாரம் செய்தபோது திமுக மீது பல்வேறு விமா்சனங்களை வைத்துள்ளாரே என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, அரசியலை சினிமா போன்று நடத்திக் கொண்டு புதுச்சேரியில் ஒருநாள் ஷோவை விஜய் நடத்திவிட்டு சென்றுள்ளாா். அந்தக் கூட்டம் வாக்காக மாறுவது மக்கள் கையில் இருக்கிறது.

தமிழகத்தில் முதல்வா் பல்வேறு திட்டங்களையும், தொழிற்சாலைகளையும் கொண்டு வந்துள்ளாா். ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளாா். அதுபோன்ற ஆட்சி புதுச்சேரிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா். புதுச்சேரியில் காங்கிரஸுடன் நட்பு ரீதியான சண்டைகள் முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவரே 16 இடங்களில் அதிகாரபூா்வ வேட்பாளா்கள், மற்றவா்கள் இல்லை என்று சொல்லி விட்டாா். அதன்பிறகு அந்தக் கட்சிக்குள் சென்று பேசக்கூடாது. தமிழக முதல்வா், துணை முதல்வரின் பிரசாரம் புதுச்சேரியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

பேட்டியின்போது புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.