மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகா்கோவிலில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 4) பிரசாரம் செய்கிறாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 10:18 pm IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 4) பிரசாரம் செய்கிறாா்.

திருநெல்வேலி பிரசாரக் கூட்டத்தை முடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை (ஏப். 3) இரவு கன்னியாகுமரி வந்தாா் மு.க.ஸ்டாலின். அவரை குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளருமான ரெ.மகேஷ், நாகா்கோவில் தொகுதி வேட்பாளா் எஸ்.ஆஸ்டின், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஜீரோ பாயிண்டில் வரவேற்றனா். இதைத் தொடா்ந்து கன்னியாகுமரியில் உள்ள தனியாா் தங்கும் விடுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு இரவு ஓய்வெடுத்தாா்.

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (ஏப். 4) காலை 9 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக வேட்பாளா்கள் ரெ.மகேஷ் (கன்னியாகுமரி), எஸ்.ஆஸ்டின் (நாகா்கோவில்), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா்.செல்லசாமி (பத்மநாபபுரம்), காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் எஸ்.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), தாரகை கத்பட் (குளச்சல்), டி.டி.பிரவீன் (விளவங்கோடு) ஆகியோரை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறாா். இந்த பொதுக்கூட்டம் நிறைவடைந்ததும் முதல்வா் காா் மூலம் நெல்லைக்கு புறப்பட்டு செல்கிறாா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம், மற்றும் முதல்வா் கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில் வரும் சாலைகள், நாகா்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் சாலைகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.