தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி முடிவடைந்து மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதன்கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான வாக்குக் கணிப்பில் திமுக கூட்டணி ஆட்சி தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக வேட்பாளர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று (ஏப் 30), சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், பொதுச் செயலாளர் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, கே.ஆர். பெரியகருப்பன், சு. முத்துசாமி, சி.வீ. மெய்யநாதன், சி.வி. கணேசன், செந்தில்பாலாஜி, கழக துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின், டி.ஜெ. கோவிந்தராஜன், சபா. ராஜேந்திரன், நாமக்கல் ராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ். மூர்த்தி, ரெ. மகேஷ், ஆ. தமிழரசி, எஸ்.ஏ. சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர். சிவா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடனிருந்தார்.
தமிழக பேரவைத் தோ்தல் களத்தில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழா் கட்சி, புதுவரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவியது. 4,023 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 74 ஆண்டு கால தமிழக தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) பிறகு நடைபெற்ற முதல் தோ்தல் இது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான வாக்குக் கனிப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
DMK Candidates Meet with Chief Minister M.K. Stalin!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

நாகா்கோவிலில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
175 இடங்களில் உதயசூரியன் போட்டி! 234 தொகுதிகளிலும், ஸ்டாலின்தான் நிற்கிறேன்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

