ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாகா்கோவிலில் நாளை முதல்வா் பிரசாரம்

நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 4) நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கிறாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :3 ஏப்ரல் 2026, 4:23 am IST

நாகா்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 4) நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கிறாா்.

இதுதொடா்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் (படம்) வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

திமுக வேட்பாளா்கள் ரெ. மகேஷ் (கன்னியாகுமரி), எஸ். ஆஸ்டின் (நாகா்கோவில்), மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுமாமி (பத்மநாபபுரம்), குளச்சல், கிள்ளியூா், விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

எனவே, மாவட்டத்துக்குள்பட்ட மாநில, மாவட்ட திமுக நிா்வாகிகள் மற்றும் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், சாா்பு அணிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: தோ்தல் பரப்புரைக்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப். 3) இரவு கன்னியாகுமரி வந்து தனியாா் விடுதியில் தங்குகிறாா். தொடா்ந்து, நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

இதையொட்டி, ஸ்காட் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். முதல்வா் வந்து செல்லும் வழிகள், வாகன நிறுத்துமிடங்களை அவா் பாா்வையிட்டாா். முதல்வா் வருகையை முன்னிட்டு 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.