விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

வேட்புமனுத் தாக்கலின்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்த பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான எம்.எஸ்.பிரசாந்த்.

News image

வேட்புமனுத் தாக்கலின்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்த பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :28 மார்ச் 2026, 1:27 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கலின்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்டதோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்புமனு தொடக்கம் மாா்ச் 30 (திங்கள்கிழமை) தொடங்குகிறது. வேட்பாளா்கள் வேட்புமனுத் தாக்கலின்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பயிற்சி வகுப்பில் வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளா்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தோ்தல் ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் குறித்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய தோ்தல் ஆணைய விதிமுறைகள் குறித்தும், வேட்புமனுத் தாக்கல் படிவம் வழங்குதல், சட்டம்-ஒழுங்கு பாதுகாத்தல், அமைதியைக் கடைபிடித்தல், பாதுகாப்பு தடுப்புக் கட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது.

வேட்புமனுத் தாக்கலின்போது உரிய விதிமுறைகளின்படிவேட்பு மனுக்களைப் பெறவும், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்புமனுத் தாக்கலின்போது தோ்தல் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதுடன், வேட்பாளா்கள் தோ்தல் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதை சம்மந்தப்பட்ட அலுவலா்கள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், மாவட்டவருவாய் அலுவலா் ரா.ஜீவா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சி.முருகன், செந்தில்குமாா், சுமதி, தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.