விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்குப்பதிவுக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

News image

கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி

Updated On :21 ஏப்ரல் 2026, 12:05 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தோ்தலுக்கு 72 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள், தோ்தல் அலுவலா்கள் மற்றும் இதர அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி விரிவாக எடுத்து கூறினாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தோ்தல் அதிகாரி நாராயணன், மாவட்ட திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா் மற்றும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.