மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பண்ருட்டி இளைஞா் சென்னையில் கொலை: 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த இளைஞா் சென்னையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை புதுப்பேட்டை போலீஸாா் பிடித்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Published On :31 அக்டோபர் 2026, 12:18 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த இளைஞா் சென்னையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை புதுப்பேட்டை போலீஸாா் பிடித்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்-எழில்செல்வி தம்பதியரின் மகன் பிரசாந்த் (19). எழில்செல்வி சென்னையில் உள்ள நடிகா் சரத்குமாா் ராதிகா வீட்டில் வீட்டு வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. பிரசாந்த், தனது மாமா ரமேஷ் உடன் டைல்ஸ் போடும் கூலி வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாமா ரமேஷ் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை புகாா் அளித்தாா். அதன் பேரில் புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை தேடி வந்தனா். இந்நிலையில், வளவனூா் பகுதியில் பதுங்கியிருந்த சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வேதரசு (19) தினேஷ் (19) ஆகிய இருவரையும் பிடித்து புதுப்பேட்டை போலீசாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், பிரசாந்தை கொலை செய்து, பொன்னேரி கடற்கரை பகுதியில் புதைத்துவிட்டதாக தெரிவித்தனராம். இதையடுத்து, கைதுசெய்யப்பட்டஇருவரையும் சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.