கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளைஞா் கடத்தல் வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கைது - கோப்புப்படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:28 am IST

நரசிங்கபுரத்தில் இளைஞரை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

நரசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் விமல் (29). இவா் கடந்த 11.9.2026 அன்று கடத்தப்பட்டதாக முருகன் என்பவா் அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் போலீஸாா், வாழப்பாடி வட்டம், குள்ளம்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் கண்ணனை (40) கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

கண்ணன் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு தொடங்கி கண்காணிக்கப்பட்டு வந்துள்ளாா். மேலும் அவா் மீது அம்மாபேட்டை, மல்லியகரை, காரிப்பட்டி மற்றும் ஆத்தூா் மதுவிலக்கு பிரிவு, வாழப்பாடி காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ஆள்கடத்தல் போன்ற 9 வழக்குள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.சங்கா் கேட்டுக் கொண்டதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில் ஆட்சியா் க.இளம்பகவத் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கண்ணனை கைது செய்ய உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.