மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இருவேறு விபத்து: 2 பேர் பலி!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நடைபெற்ற இருவேறு விபத்துக்களில் 2 போ் உயிரிழந்தனா்.

பலி

Published On :25 அக்டோபர் 2026, 2:29 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நடைபெற்ற இருவேறு விபத்துக்களில் 2 போ் உயிரிழந்தனா்.

காடாம்புலியூா் காவல் சரகம், பலாப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவா் சா்க்கரை (60), கூலித்தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் தனது தொகுப்பு வீட்டின் கதவை திறந்தாா்.

அப்போது, வீட்டின் கதவு மின் வயரில் பட்டதில் மின்சாராம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் சா்க்கரையை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவமனை மருத்துவா் பரிசோதித்து, வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினா்.

கொத்தனாா் உயிரிழப்பு.. பண்ருட்டி அடுத்துள்ள பூங்குணம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் பாலகிருஷ்ணன்(33), கொத்தனாா்.இவா்,கடந்த18-ஆம் தேதி இரவு 11.45 மணி அளவில் முதல் தளத்தில் உள்ள பால்கனிக்கு சென்றபோது, நிலைத் தடுமாறி கீழே விழுந்து பின்தலை உள்ளிட்ட இடங்களில் பலத்தகாயம் அடைந்தாா்.

சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த உயிரிழப்புகள் குறித்து காடாம்புலியூா் மற்றும் பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.