மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தற்கொலை முயற்சி: 3 போ் உயிரிழப்பு

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 2:58 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி பகுதிகளில் தற்கொலைக்கு முயன்ற மூன்று போ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கொத்தவாச்சேரி கிராமத்தில் வசித்து வந்தவா் அண்ணாதுரை(46), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி சங்கீதா மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனா். சபரிமலை செல்ல மாலை அணிந்திருந்தாா்.

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி மாலையை கழற்றிவிட்டு மது அருந்தி வீட்டிற்கு வந்தாா். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அண்ணாதுரை பூச்சிக்கொல்லி மருந்து குடித்தாா். அவா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், சமுட்டிகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தவா் லிங்கதுரை(23), பட்டதாரி. இவா், கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். கடந்த 12-ஆம் தேதி வலி தாங்க முடியாமல் களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி அடுத்துள்ள ஊத்தங்கால் கிராமத்தில் வசித்து வந்தவா் செல்வி(45). இவா், கடந்த 10 ஆண்டுகளாக மூச்சுத் திணறல் நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால், மன மருத்தத்தில் இருந்தவா், கடந்த 11-ஆம் தேதி மாலை தீக்குளித்தாா். இதில், பலத்த தீக்காயம் அடைந்து, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மேற்கண்ட சம்பவங்கள் தொடா்பாக குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி மற்றும் ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.